வெள்ளி, 21 மார்ச், 2014

சேர் பொன்னம்பலம் இராமநாதன்

சேர் பொன்னம்பலம் இராமநாதன்

சேர் பொன்னம்பலம் இராமநாதன்
சேர் பொன்னம்பலம் இராமநாதன் (ஏப்ரல் 16, 1851 – நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
வாழ்க்கை வரலாறு
  1. பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார்.
குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.
அரசியல் சேவை
1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.
சமூக சேவை
இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில்அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில்யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.
சமய சேவை
அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம்,  தத்துவம்,  யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 – 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.
தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.
1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.
யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும்,  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலைநிறுவப்பட்டுள்ளது.

சேர்.பொன். இராமநாதன்.

சைவத் தமிழுலகில் தலைசிறந்த பெரியார் வரிசையில் சேர்.பொன். இராம நாதனுமாவார். இவர் கல்வியால், ஆன்மீகச் சிந்தனையால், கலையார்வத்தினால் சிறந்து விளங்கினார். மானிப்பாயிலே பிறந்தார். பட்டங்கள், பதவிகளைப் பெற்று வேறு இடங்களிற்கு சென்றமையால்  பிறந்த இடத்தில் தொடர்ந்து வாழமுடியவில்லை.
தென்பகுதியில் சிங்கள, இஸ்லாமியரிடையே ஏற்பட்ட கலவரத்தை பிரிட்டிஸ் அரச சபை முதல்வரிடம் சென்று பேசி சிறப்பான முறையில் பேசித்தீர்த்து வைத்தார். இலண்டனில் இருந்து இலங்கை வந்த போது சிங்கள மக்களே துறைமுகத்திலிருந்து தாமே ஊர்வலமாக வண்டியினை இழுத்தமை இவருடை பேச்சுத் திறமையினையும், தலமைத்துவ பண்பிணையும் வெளிப்படுத்துகின்றது. “சேர்”என்ற பட்டமும் வழங்கப்பட்டமையும் சட்ட நிரூபன சபையில் அங்கத்தவர் பதவியைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 20ஆம் நூற்றாண்டுப் புலவர்களில் ஒருவராகவும் குறிப்பிடப் படுகின்றார். தமிழவேள் இவருடைய ஊர் மருதனார் மடம், இணுவில் என தமிழ் பலவர் மாநாட்டு சிறப்பு மலரில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலே சிறந்த சிவன் ஆலயம் ஒன்றினை நிறுவினார். இன்றுவரை இதனை இவரது சந்ததியினர் சிறப்புடன் பராமரிக்கின்றனர். சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்திலே திருநெல்வேலியிலே பரமேஸ்வராக் கல்லூரியையும், பரமேஸ்வரா ஆலயத்தையும் அமைத்தார். இணுவில் கிராமத்திலே 25 ஏக்கர் காணியை வாங்கி பெண்களுக்கென இராமநாதன் கல்லூரியை 1913 இல் நிறுவினார். தமிழர்களின் பண்பாட்டினைப் பிரகாசிக்கும் வகையிலே மாணவரது செயற்பாடு அமையவேண்டுமென சித்தம் கொண்டார். இக்கல்லூரியின் வடமேல் திசையில் தனக்கென ஒருமனை அமைத்து அற வாழ்வினை மேற்கொண்டார்.
தன்னுடைய சமாதியை அச்சூழுலிலே அமைக்கவேண்டும் என்ற நோக்கிலே அதேயிடத்தில் ஒரு ஆலயம் அமைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இவருடைய மருமகன் சு.நடேசம்பிள்ளை இவருடைய கனவினை நனவாக்கி வைத்தார். இவரது உருவச் சிலை கொழும்பில் அமைக்கப்பட்ட பொழுதிலும் இவர் வாழ்ந்த இடமான இராமநாதன் கல்லூரி முன்றலிலும் ஒரு முழுஉருவச்சிலை  அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1938-1940 காலப்பகுதியில் இவரது சமாதியடைந்த இடத்தில் இராமநாதேஸ்வரன் கோயில் இந்திய சிற்பக்கலை மரபினை ஒட்டி இந்தியக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு கருங்கற்களால் கட்டப்பட்டு புனிதமாக பேணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்தாகும்.

கணபதி படிப்பகம் – வல்வை

கணபதி படிப்பகம் – வல்வை

கணபதி படிப்பகம் - வல்வைஇன்று வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவிலின் வடக்கு பக்கத்தில் அமைந்திருக்கின்றது கணபதி படிப்பகம் – வல்வை. ஆரம்பத்தில் வல்வை வேம்படிச் சந்திக்கு அருகாமையில் சின்னக்கிளியப்பாவின் கார் கராச்சில் வேம்படி வாசிகசாலை என்ற பெயருடன் இயங்கி வந்தது. அந்த வாசிகசாலையை கொத்தியால் யூனியன் தொளிலாளர்கள் மிகவும் சிறப்பாக நிர்வகித்து வந்தனர்.
அறுபதின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டுக் கரையோர கிராமமான விழுந்த மாவ

மடத்துவெளி சனசமூக நிலையம்


மடத்துவெளி சனசமூக நிலையம்கிராம மட்டங்களில் மக்களின் பல்வேறு அபிவிருத்திக்கும் மக்களின் விழிப்புணர்விற்கும் வழிகாட்டியாக அமைக்கப்படுவதே சனசமூக நிலையங்கள் ஆகும். இந்த வகையில் புங்குடுதீவில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இயங்கி வருவது தான் இந்த மடத்துவெளி சனசமூக நிலையம் ஆகும்.
மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக அமைப்பாகும் . இந்த நிலையம் முறைப்படி ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு தைத்திங்கள் பதினைந்தில் யா/கி/ச/qvrep/௨௬௬ என்ற பதிவிலக்கத்துடன் ஆரம்பிக்கபட்டு கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலய வளவினுள் அமரர் க. ஐயாத்துரை ஆசிரியர் அவர்களின் பாரிய முயற்சியினால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட அமரர்.ச.சொக்கலிங்கம் அவர்கள் இந்த சனசமூகநிலையத்தை திறம்பட செயற்படுத்தி வந்திருந்தார். காலக்கிரமத்தில் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட நிலையம் ஒரு ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது. அறுபதுகளின் இறுதியில் கமலாம்பிகை வித்யாலய பழைய மாணவர்களான வ.நல்லையா (இராமச்சந்திரன் -நூலகர் )மகேஸ்வரன் (மலைப்பாம்பு) , எ.இராசரத்தினம் (மு-கி-ச-உறுப்பினர் , இ.இராசமாணிக்கம் (இசைக்கலைஞர் ) போன்றோர் இணைந்து ஒரு சமூக சேவைக்கான எழுச்சியை முனைப்பாக்கினர். இந்த கால கட்டத்தில் கமலாம்பிகை வித்தியாலய வளவினுள் ஒரு கலை விழாவினையும் பின்னர் வல்லன் சண்முகநாதன் வித்தியாசாலை வளவினுள் ஒரு சிவராத்திரி விழாவினையும் நடாத்தியதோடு அந்த விழாக்களிலேயே நாடகங்களையும் அரங்கேற்றி தமது கலைத் தாகத்தினையும் வெளிப்படுதினார்கள். இத்தனைக்கும் பின்னால் புங்குடுதீவு கிழக்கின் சிற்பி என்றும் புரட்சியாளன் என்றும் போற்றப்படும் கண்ணாடி என்று செல்லமாக அழைக்கப்படும் அருணாசலம் சண்முகநாதன் இந்த கிராமத்தின் சுமைகளை தூக்கி தன் தோளிலே வைத்தான். அவனது வழிகாட்டலில் புதிய இளைஞர் பாசறை ஒன்று கட்டி எழுப்ப பட்டது. முன்பு இயங்கி வந்த சனசமூக நிலையத்தின் எச்சங்களை துழாவி எடுத்தான். ஒரு சாய்வு படிக்கும் மேசை உடனும் இரண்டு வாங்குகளினுடனும் எச்சங்களாக சொக்கலிங்கம் ஆசிரியர் வீட்டில் சனசமூகநிலையம் சுருங்கி போய் கிடந்தது. வீறு கொண்டெழுந்த சண்முகநாதன் இராமச்சந்திரன். பாலசுப்ரமணியம், தர்மபாலன் போன்ற இளைஞர்களை இணைத்துக்கொண்டு இயங்க ஆரம்பித்தான். முதல் காரியமாக முருகன் ஆலய அன்னதான மடத்து மண்டபத்தில் இளமுருகன் சிறுவர் பாடசாலையை ஆரம்பித்து அதன் ஆசிரியையாக எஸ்.கமலாம்பிகை அவர்களை நியமனம் செய்தார்கள். கிராமத்து இளைஞர்கள் கிளிதட்டு விளையாட்டில் இருந்து கரப்பந்தாட்டத்துக்கு மாறினார்கள், விளையாட்டோடு நிற்காமல் ஒரு தற்காலிக வாசிகசாலையை அலுவலகத்தோடு சேர்த்து எ.வே.இளையதம்பி அவர்களின் கட்டிட தொகுதிக்கு பக்கத்தில் இடப்பக்கமாக நிறுவப்பட்டது. தரை சீமேந்தினாலும் சுவர் பகுதியை மரத்தினாலும் கூரையை ஓடு கொண்டும் எளிமையாக அமைக்கப்பட்ட சனசமூகநிலையம் எல்லோரும் பாராட்டும் விதமாக ஒரு இளைஞர் பாசறையாக அத்திவாரமாக அடித்தளமிட்டது. சனசமூக நிலையத்தின் நிர்வாகசபை இ.குலசேகரம்பிள்ளை ஆசிரியரின் தலைமையில் புதிய சரித்திரம் படைக்க புறப்பட்டது. சண்முகநாதனின் சிறந்த வழிகாட்டலிலும் சேவை மனம் படைத்த இளைஞர்களின் திறமையினாலும் சிறப்பாக செயல்பட்டது. சனசமூக நிலையத்தின் சிறப்பான தடைகள் இல்லாத வாசிகசாலை செயல்பாடு புங்குடுதீவு மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது மறக்க முடியாதது. சனசமூகநிலயத்தின் முன்னணி வழிகாட்டிகளாக போசகர்களாக போ.நாகேசு (வர்த்தகர்), க.தியாகராசா ஆசிரியர், ஆகியோர் முன்னிற்க எ.சண்முகநாதன், என். தர்மபாலன், எஸ்.எம்.தனபாலன், சிவ.-சந்திரபாலன் மு.வேலுப்பிள்ளை,  பொன்.அமிர்தலிங்கம், க.சந்திரசேகரம் ஆகியோரின் நிர்வாக திறனில் நிலையம் அபரிதமான வளர்ச்சி கண்டது. பதவி ஆசை இல்லாத இளைஞர்களை அந்த பாசறை கொண்டிருந்தது என்பதை பெருமையாக சொல்லி கொள்ளவேண்டும். மூத்த உறுப்பினர்கள் பின்னே வந்த மிக சிறிய இளைஞர்களிடையே நிர்வாக பதவிகளை கொடுத்து தாங்கள் வழிகாட்டி கொண்டிருந்தது சிறப்பான ஒரு அம்சமாக மிளிர்ந்தது. அடுத்த தலைமுறையாக ப.யோகேஸ்வரன், எ.திகிலழகன், எம் .முத்துகுமார், எஸ்.எம் .குணபாலன், எ.சதாசிவம், கு.ஜெகநாதன்,  வே.கனகராசா, தா.சிவகுமார், ம.மோகனபாலன்,  து.ரவீந்திரன், எஸ் .சிவலிங்கம், க.உலகேஸ்வரன், தி.கருணாகரன், சி.விசயன், இ.ரவீந்திரன், எ.பாலசுந்தரம், கே.ரவி, எஸ்.சட்சிதானந்தன் சின்னதுரை, சு.சண்முகநாதன், ஐ.தர்மகுலசிங்கம், கா.நாகரத்தினம்,  தா.சிவபாலன் என்ற வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளமே உருவானது. சனசமூக நிலையத்தின் சீரிய செயற்பாடு கண்ட வர்த்தகர் எ.வே.இளையதம்பி அவர்கள் சனசமூகநிலையம் அமைந்திருந்த காணியை இனாமாக தாரை வார்த்து கொடுத்து பெருமை தேடிக்கொண்டார். நிலையத்துக்கு ஒரு இரட்டை மாடி கட்டிடத்தை நிறுவ சண்முகநாதன் திட்டம் வகுத்திருந்தார். இடைநடுவில் அவர் கனடாவுக்கு இடம்பெயர அப்போதைய நிதிநிலைமையை கணக்கிலெடுத்து கொண்ட ந.தர்மபாலன் திட்டத்தை மாற்றி இப்போதைய அமைப்பில் நிலையத்தை அமைக்க முன்னின்று பாடுபட்டார். தமக்கென காணி கிடைத்ததும் துரிதமாக செயல் பட்ட நிலையத்தினர் நிரந்தரமான ஒரு கட்டிடத்தை அழகாக அமைத்து ஒரு சாதனையை படைத்தனர். வாசிகசாலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அனைத்து பத்திரிகைகள் சஞ்சிகைகளும் வாசிப்புக்கென வைக்கப்பட்ட சிறப்பை கொண்ட வரலாறை படைத்திருந்தது. கிராமம் பூராக திரட்டப்பட்ட சுமார் 8௦௦ நூல்களைக் கொண்டதோடு வாசிகர்களின் உள்ளத்தை மகிழ்வூட்டவென வானொலி செவையையும் வழங்கி இருந்தது.  வாசகர்களுக்கென வீரகேசரி, ஈழநாடு, மித்திரன், தினகரன், சுதந்திரன் போன்ற பத்திரிகைகளும் குமுதம், ஆனந்தவிகடன், ராணி தேவி சுடர், சிரித்திரன், இதயம், சாவி, பாக்யா, மல்லிகை போன்ற வார இதழ்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தது பெருமையான விசயமாகும். இவற்றை நீண்ட காலமாக பொ.நாகேசு , எஸ்.கே.மகேந்திரன், வே.பாலசுப்பிரமணியம், ப.கனகலிங்கம்,சிவ.சந்திரபாலன், க.உலகேஸ்வரன் போன்றோர் தங்கள் செலவில் வழங்கி வந்தனர். தினசரிப் பத்திரிகைகளை யாழ்நகரில் இருந்து தினமும் காலை நேரத்திலேயே தனது வாகன சேவையில் எடுத்து வந்த பொன்னம்பலம் அவர்கள் (இருபிட்டி)மறக்க முடியாத நன்றிக்குரியவர்.
சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள்
கிராமத்தின் குடி நீர் பிரச்சினையை தீர்க்க சிறிய கிணறுகளை தோண்டியமை.
பொதுக் கிணறுகளை தூர் வார்ந்தமை, குளங்களை ஆழமாக்கியமை, முற்று முழுதாக மது ஒழிப்பை உருவாக்கி கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை, மீன் பிடி, விநியோகத்தில் சீரான முறையை உருவாக்கியமை, விளையாட்டு துறையை ஊக்குவித்து வட மாகாணத்திலேயே சிறந்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட அணிகளை உருவாக்கியமை, கிராமத்தில் எந்த விதமான சமூக சீர்கேடுகளும் இல்லாத கட்டு கோப்பில் மக்களை வழி நடத்தியமை, ஆலயங்களின் தொண்டில் உதவியமை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுதலை பாதையில் அணி வகுத்தமை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் உதவியமை, பாடசாலை முன்னேற்றத்தில் பங்களித்தமை, கலை விழாக்கள், சிவராத்திரி விழாக்கள் என நடாத்தி சிறந்த நாடக கலைஞர்களை உருவாக்கியமை, நெற்பயிர் செய்கைக்கு ஊக்கம் கொடுத்து விவசாயத்தை மேம்படுத்தியமை என நீண்டு செல்லும் வரலாறு உண்டு.

சி. மாணிக்கவாசகர்

சி. மாணிக்கவாசகர்

சி. மாணிக்கவாசகர்வல்வெட்டிதுறையைப் பொறுத்தவரை மிக உயர்ந்த அரச மற்றும் அரசசார் பற்ற துறைகளில் பணியாற்றியவர்களில் மிக முதன்மையானவர் அமரர் திரு. சி. மாணிக்கவாசகர் (C.C.S) ஆவார்.
Ceylon Civil Service என்னும் இலங்கையில் முன்னர் அமையப்பெற்றிருந்த அரசசேவைகளுக்கான அதியுயர் கல்வித் தகமையைப்பெற்றிருந்தவர். பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரை மணம் புரிந்து கொண்டதாலும், சேவைக்காலத்திலும் அதன் பின்னரும் வல்வையில் வாழாத காரணத்தாலும் எம்மால் மறக்கப்பட்டவர்.

சிவ. சி. மாணிக்கவாசகர்

இசையமைப்பாளர் நிரு (நிர்மலன்)


இசையமைப்பாளர் நிருஎத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்ததெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும்

வயலின் வித்துவான் வே.சங்கரலிங்கம்


வே.சங்கரலிங்கம்கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு. வே.சங்கரலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் ‘பருத்தியடைப்பு’ என்னும் பகுதியில் சாதாரண தொழிலாளர் குடும்பம் ஒன்றில் 1922 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நமது கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம் ஐயா அவர்கள். ஆரம்பக் கல்வியை கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயத்திலும் பின்னர் திருநெல்வேலி முத்துத் தம்பி வித்தியாலயத்திலும் கற்ற இவர் எட்டாம் வகுப்புடன் பாடசாலைக்கல்விக்கு ‘முழுக்குப் போட்டு’ விட்டு கலைத்துறையில் ஈடுபடலானார்.
தனது சொந்த மாமா திரு.கே.கே.குமாரசுவா

முத்துலட்சுமி கோபால்


முத்துலட்சுமி கோபால்யாழ் குடாநாட்டின் முதலாவது பெண் நாதஸ்வர இசைக்கலைஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ள திருமதி முத்துலட்சுமி கோபால் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், சட்டநாதர் கோவிலடி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டவர். ஆரம்பக் கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் கல்வியில் அதிக நாட்டமில்லாது தந்தையாருக்கு உதவியாக நாதஸ்வர இசையைக் கற்பதில் ஆர்வம் காட்டினார். நாதஸ்வர இசைக்கலையை பரம்பரைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த முத்துலட்சுமி கோபால் தனது முதல் குருவாக பெரியசாமி என்பவரை ஏற்றுக்கொண்டு நாதஸ்வர இசை பயின்றார். பின்பு இந்தியக் கலைஞர்களான திருநாவுக்கரசு, தற்சிதானந்தம் ஆகியோரிடம் நாத