வெள்ளி, 21 மார்ச், 2014

ஒரு மாறுதலுக்காக : வைரமுத்து கவிதைகள்


Click Here

Hands-heartஒரு மாறுதலுக்காக -
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்
தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்
மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்
உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையணை
முளைக்கட்டும்
அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டிநாய் தூங்கட்டும்
••••
சிற்றுளியின் பெருமூச்சில்
சிகரங்கள் நகர்ந்தன
காதலின் வெப்பத்தில்
கற்பாறை இளகியது
மழைபெய்யாத மலையில்
இன்னொரு நதியும்
இறங்கி வந்தது
அது -
வெறிகொண்ட சிற்பியின்
வியர்வை நதி
ஷிரின் என்ற பெயரை
அவனோடு சேர்ந்து
உளியும் அல்லவா உச்சரித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக