
முத்துலட்சுமி கோபால் பன்னிரண்டாவது வயதில் முதலாவது நாதஸ்வர இசைக் கச்சேரியை நல்லூர் சட்டநாதர் ஆலயத்தில் அரங்கேற்றினார். ஆரம்பத்தில் தந்தையாருடன் உதவி நாதஸ்வரம் வாசித்து வந்த முத்துலட்சுமி கோபால் இசைக் கச்சேரிகளை மேலும் தொடரும் முகமாக கல்வியங்காட்டில் நிரந்தரமாக வசிக்க வந்தார். ஆலயங்களின் விழாக்களில் தனது நாதஸ்வர இசைக் கச்சேரிகளை நடாத்தி பல ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டார்.
ஆண்களால் மட்டுமே நாதஸ்வரம் வாசிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை மாற்றி, பெண்களாலும் வாசிக்க முடியும் என்பதை முதன் முதலில் வெளிப்படுத்திய இப் பெண்மணி தனது பெண் பிள்ளைகளான தையல்நாயகி நாதஸ்வரக் கலையிலும், செல்வநாயகியைத் தவில் இசையிலும் தேர்ச்சி பெறச் செய்துள்ளார். தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து பல கச்சேரிகள் செய்து வருகின்றனர்.
இவரது நாதஸ்வர இசைத் திறமையைப் பாராட்டி நல்லூர் பாலகதிர்காம பிரதம குருக்கள் ”நாதஸ்வர கானவித்தகி” என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளார். நல்லூர் பிரதேசக் கலாச்சாரப் பேரவையும் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலாச்சார விழாவில் ”கலைஞானச்சுடர்” விருது வழங்கி இவரைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.
By – Shutharsan.S
By – Shutharsan.S
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக