வெள்ளி, 21 மார்ச், 2014

பூ நுகரும் காலம் – நா. முத்துக்குமார் கவிதை


rojaஅவனுக்குபூக்கள் என்றால்பிரியம் அதிகம்
செம்மண் பரப்புகளில்
உண்டு வளர்ந்து
ரசாயணம் துறந்து
கூர் நாசியில்
அவை தரும் மென்வாசம்
சொல்லில் அடங்காது
நாணல்களில்
உயர்ந்து அடங்கி
நீர் ஓவியம் வரைகிற
வெண்பனிப் பொழுது
அவன்
பூ நுகரும் காலம்
ஒவ்வொரு நுகர்வுக்கும்
ஒவ்வொரு வாசம் தர
பூக்களால் மட்டுமே முடியும்
பூக்களுக்கும்
அவனை ரொம்பப் பிடிக்கும்
விரல்களால் உயிர் பறித்து
அவன் நுகர்வதற்கு
முந்தைய கணம்வரை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக