வெள்ளி, 21 மார்ச், 2014

ந்தையர் ஆண்டதின் நாடாகும் -இதை

குரல் - பாடகர் சாந்தன்
எந்தையர் ஆண்டதின் நாடாகும் -இதை
எதிரிகள் ஆள்வது கேடாகும்
வந்துநீ களத்தினில் போராடு -அடிமை
வாழ்விலும் சாவது மேலாகும்

மீனினம் பாடிடும் தேனாடு -வரை
விண்முட்டும் சீர்திரு மலைநாடு
மானினம் வாழ்முல்லை வளக்காடு -வயல்
வன்னியும் எங்களின் மண்ணாகும்

முத்துக்கள் விளைகடல் மன்னாரும் -தம்பி
முத்தமிழ் புலமைசேர் யாழ்நாடும்
சொத்தென நிறைபுகழ் தமிழீழம் (2)-இதில்
தொல்லைகள் மேவினால் என்னாகும்

சிங்களர் காலடி படலாமோ -ஈழம்
சீர்கெட தமிழர்கள் விடலாமோ
சொந்த மண் அழிந்ததன் பின்னாலே(2) -பிறர்
சோற்றுக்கு வாழ்வதோ வாழ்வாகும்

கொலையோடு கொள்ளைகள் செய்வார்கள் -பெரும்
குண்டினை மழையென பெய்வார்கள்
தலையோடு மனைகளும் பாழாக(2) -தீயில்
கருக்குவர் ஒவ்வொரு நாளாக

தாயகம் மீட்டிட நீயோடு -பிரபா
தானையில் சேர்ந்தொரு புலியாகு
போயினி செருவினில் விளையாடு (2)-தமிழ்
பூத்திட புதியதோர் புறம்பாடு
புறம்பாடு.. புறம்பாடு.. புறம்பாடு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக